Tuesday, May 28, 2013

நான் ஒரு முழு விழிப்புணர்வு

ஓஷோவை ஒரு புரட்சி என்றே கூறுவேன். நம் சான்றோர்கள் தீய எண்ணங்களை அடக்க வேண்டும் என்பர். எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டாம் என ஓஷோ கூறுவார். இது என்ன புதுமை என்று நினைக்க தோன்றுகிறதா? எண்ணெங்களில் நல்லவை கெட்டவை என்று ஏதும் இல்லை, அவை எண்ணங்கள் அவ்வள்வுதான் என்று சொல்வார். தெருவில் ஓடும் பேருந்தை பார்ப்பதுப் போல் மனதில் எழும் எண்ணங்களை கவனிக்க சொல்வார். எண்ணங்களின் செயல்பாட்டை கவனிக்கும்பொழுது நாம் விழித்துக் கொள்கிறோம். நாம் விழித்துக்கொள்ள துவங்கினால் எண்ணங்களும் மறைய துவங்கும். புத்தர் ஞானம் பெற்றப் பிறகு, “நான் செய்தது எல்லாம் ஒரு வெற்றிச் செயல் அல்ல,  நான் ஒரு முழு விழிப்புணர்வு அவ்வளவுதான்”, என்று கூறினார். ஆக விழிப்புணர்வு என்றால் மனம் வெற்றாக இருப்பதே ஆகும். மனம் மனிதனை ஆண்டுக்கொண்டிருக்கிறது. மனிதன் மனதையாளத் துவங்கினால் தான் வாழ்க்கை சிறக்கும்.

மகிழ்ச்சி தழைக்கட்டும் ! !

1 comment:

  1. hey aroul anna ur blogs r too good and informative pls keep continuing this that helps others also

    ReplyDelete