Friday, May 24, 2013

செம்மை ஆக்குதல்...??

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே (அகத்தியர்)

சித்தர்கள் தங்கள் மெய் உணர்விலிருந்து அருளிய பாடல்களுக்கு விளக்கம் அளிக்க முனைந்தால் பொருள்  பிறழச்சி தான் நேரும். அதனால் சுருக்கமாக உள்ளதை அப்படியே எளிய நடையில் தருகிறேன்.
 மந்திரம் ஓதுதல், மூச்சுப் பயிற்சி, குணடலினி எழுப்பி ஊழ்கம் (தியானம்) பழகுதல் யாவும் மனதை செம்மையாக்கும் வழிகள். மனமது செம்மையான பின் அவன் பேசும் சொற்கள் யாவும் மந்திரமே.
ஆனால் செம்மையாக்குவது என்றால் என்ன? இந்த இடத்தில் என்ன பொருளை தரும்? செம்மையாக்குவது என்றால் மனதை கல் போல் ஆக்குதலா? அறியாத காலத்தில் இந்தப் பாடலை படிக்கும் பொழுது நான் அப்படி தான் புரிந்துக் கொண்டேன். செம்மை என்ற தமிழ்ச்சொல்லுக்கு அகரமுதலியில் பொருள் தேடினால் கூட இப்பாடலை உணரமுடியாது.
செம்மையாவது என்றால் இந்த இடத்தில் மனமற்ற நிலையைத் தான் குறிக்கிறது. மனதின் தன்மையை புரிந்துக்கொண்டால் அதுவே இந்த நிலையை அடைய வழி வகுக்கும். மனதின்  நுண்ணிய செயல்பாடுகளை அறிந்துக் கொள்ள ஓஷோவைத் தவிற வேறு யாரும் அவ்வளவு எளிமையான நடையில் விளக்க முடியாது. படியுங்கள் அவரது நூல்களை. மனதை செம்மை படுத்துங்கள்.

மகிழ்ச்சி தழைக்கட்டும் ! !

No comments:

Post a Comment